உள்ளூர் செய்திகள்

பழங்களை விரும்பி சாப்பிடுங்கள்

* வாழ்வு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நமக்குத் தெரியாது. காலம் விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அதனால் உணவைத் தேடி அலைவதோடு கடவுளைத் தேடும் பணியிலும் ஈடுபடுங்கள். * பேராசையுள்ள மனிதன் எதனாலும் திருப்தி அடைவதில்லை. எதையோ பறிகொடுத்தது போல துக்கத்திலேயே காலத்தைக் கழிக்கிறான். மன திருப்தியை விட மகிழ்ச்சியானது உலகில் வேறில்லை.* அனைத்து ஆசைகளையும் இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள். மனதை சமநிலையில் வைக்க பழ உணவுகளையே விரும்பி சாப்பிடுங்கள். யாராவது உங்களைத் திட்டவோ, அடிக்கவோ முற்படும் போது அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.* இறை நிலையை அடைய ஒரே வழி பக்தி மட்டுமே. உலகில் இருக்கும் அனைத்து தீமைகளில் இருந்து விடுவிப்பதும் அது தான். உண்மையை அறிந்து கொள்ள உதவும் ஒரே வழியும் அதுவே.- சாய்பாபா