போலி ஒருநாளும் உண்மையாகாது
UPDATED : ஜூன் 21, 2017 | ADDED : ஜூன் 21, 2017
* வாழ்வில் குறுக்கிடும் மேடு பள்ளங்களைக் கண்டு கலங்குவதால் பயனில்லை. அது கற்பிக்கும் பாடங்களை மறப்பது கூடாது. * ஆசை என்னும் உமியால் உயிர் என்னும் அரிசி மூடப்பட்டிருக்கிறது. உமியை நீக்கி விட்டால் அரிசி மீண்டும் முளைப்பதில்லை. * உலகில் தோன்றிய எந்தப் பொருளும் அழிவதில்லை. அது வேறொன்றாக மாறிக் கொண்டேயிருக்கிறது. * ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும் போது வீண் புலம்பல், கவலை அனைத்தும் பறந்தோடி விடும். * போலி ஒருநாளும் உண்மையாகாது. வேடம் கலைந்தால் உண்மையை உலகம் தெரிந்து கொள்ளும். சாய்பாபா