உள்ளூர் செய்திகள்

எண்ணங்களைக் கோர்க்கும் நார்

* 'நம்மால் முடியும்' என்றால் கடவுள் அருள் கிடைக்காது. அனைத்தும் கடவுள் தான். என்னிடம் எதுவுமே இல்லை என்று சரணாகதி அடைந்தால் கடவுள் அருள் கிடைக்கும்.* பகவானுடைய பெயரைச் சொல்லி, அவருடைய புகழைப் பாடுவது தான் பக்தி மார்க்கத்துக்கு உரியதாகும்.* கடமையைக் கருத்துடன் செய்வது மனிதரின் பொறுப்பு. அதற்குப் பலன் அருள்வது ஆண்டனின் பொறுப்பு.* அன்பே தெய்வம், அனைத்தும் அன்பு மயம், உள்ளத்தில் அன்பைப் பெருக்கி அனைவருக்கும் அளித்து வாழ முற்படுங்கள்.* அறியாமை என்ற தூக்கத்திலிருந்து உங்களை எழுப்பி, ஒளியூட்டும் பணியில் ஈடுபடச் செய்வதே சுப்ரபாதமாகும்.* பூக்களைக் கோர்க்க நார் தேவை. அதுபோல், அன்பு நிறைந்த எண்ணங்களைக் கோர்க்க 'உடம்பு' என்னும் நார் தேவை. மலர்கள் உதிர்ந்துவிட்டால் நாருக்கு வேலை இல்லையென்றாலும், அதுவரை நார் மிகவும் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.- சாய்பாபா