உள்ளூர் செய்திகள்

இறுதிவரைக்கும் போராடு!

* மனித மனத்தை சீர்படுத்தி தூய்மை ஆக்காவிட்டால், உலகை சீர்படுத்த எடுக்கும் திட்டங்கள் அனைத்தும் பயனற்றதாகி விடும்.* கடவுள் கொடுப்பதை அழிக்கமுடியாது. மனிதன் கொடுப்பதை பாதுகாக்க முடியாது. * தன் கடமையைச் சமுதாயத்திற்கு வெளிக்காட்ட மட்டுமே மனிதன் முயற்சிக்க வேண்டும்.* தன்னம்பிக்கையே கடவுள் நம்பிக்கைக்கு அடிப்படையாகும்.* சந்தேகப்படுவது எளிது; நம்பிக்கை கொள்வது கடினமானது.* கடவுளின் உதவியையும் அரவணைப்பையும் விரும்பும் மனிதன், முதலில் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.* குற்றம் செய்வது இயற்கையானது என்று எண்ணுவதே பெரிய குற்றமாகும். * ஆசிரியர் சொல்வதைப் பின்பற்று, தீமையை எதிர்கொள், இறுதி வரை போராடு, விளையாட்டை ரசித்து முடி. - சாய்பாபா