நல்லவரிடம் நட்பு கொள்
UPDATED : டிச 01, 2015 | ADDED : டிச 01, 2015
* நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள். நல்லறிவு தரும் நுால்களைப் படியுங்கள்.* பக்தி என்பது உணவுடன் தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாக இருக்கக்கூடாது. சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும்.* நாக்கைக் கட்டுப்படுத்தினால் உள்ளத்தையும், உடலையும் எளிதாக வசப்படுத்த முடியும்.* இஷ்ட தெய்வம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் மனம் ஒன்றி தினமும் வழிபடுங்கள்.* கடமை தவறாமை, தர்மவழியில் நடத்தல் ஆகிய இரண்டையும் பின்பற்றினால் கடவுளை எளிதாக அடைய முடியும்.சாய்பாபா