உள்ளூர் செய்திகள்

கைகொடுப்பார் கடவுள்

* கடவுள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். அவரின் வழிகாட்டுதல் கரை சேர்க்கும்.* யாரையும் திசை மாற்ற வேண்டாம். உண்மைக்குப் புறம்பாக எதையும் திரித்துக் கூறாதீர்கள்.* பொறுமையும், விடாமுயற்சியும் உங்களிடம் இருந்தால், வெற்றி வந்து சேரும்.* துன்பம் கண்டு துவளாதீர்கள். தக்க சமயத்தில் கைகொடுக்க கடவுள் அருகிலேயே காத்திருக்கிறார்.* குறை காணும் பழக்கத்தை விட்டொழியுங்கள். பிறரிடம் உள்ள நல்லதை மட்டுமே காணுங்கள்.* செய்த உதவியை ஒரு நாளும் மறப்பது கூடாது.- சாய்பாபா