உள்ளூர் செய்திகள்

நல்ல நண்பர்கள்

* நல்லதைச் சொல்வதால் மட்டுமே பயன் உண்டாகி விடாது. அதைச் செயலில் வெளிப்படுத்துவது அவசியம்.* மனிதப்பிறவி கிடைப்பது அரிது. அதைப் பயனுள்ளதாக்கிக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. * இளமை நிரந்தரமானது அல்ல. வானில் நகர்ந்து செல்லும் மேகம் போல காணாமல் போய் விடும்.* சத்தியம், தர்மம் இரண்டும் தான் நன்மை வழங்கும் உண்மையான நண்பர்கள்.* தீய குணத்தைக் கூட கடவுளிடம் சமர்ப்பித்து விடுங்கள். அதை நல்லதாக்குவது அவர் பொறுப்பு.- சாய்பாபா