உள்ளூர் செய்திகள்

நல்ல பொழுதாகட்டும்!

* கடவுள் எல்லாம் அறிந்தவர். உங்களின் நல்ல எண்ணமும், முயற்சியும் வெற்றி அடைய கடவுளின் அருள் எப்போதும் காத்திருக்கிறது. * தீய குணங்களால் நாம் துன்பம் அடைகிறோம். இவற்றை அழிக்க வேண்டும் என்று சொல்வதால் பயனில்லை. அதை கடவுளிடம் சமர்ப்பித்து விடுங்கள். அதை நல்லதாக்கி தருவது அவர் பொறுப்பு.* அதிகாலையே எழுந்துவிடுங்கள். கடவுளைப் பற்றிச் சிந்தியுங்கள். அவரின் திருநாமத்தை பக்தியுடன் ஜெபியுங்கள். அன்றைய பொழுது நல்லதாக இருக்கும். * கடவுளிடம் நாம் உரையாடுவது தான் உண்மையான பிரார்த்தனை. எல்லாத் துன்பங்களுக்கும் பிரார்த்தனையே சிறந்து மருந்து. * பிரார்த்தனை என்பது ஒரு வாழ்க்கை முறை. உலகிலுள்ள அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று அன்றாடம் வேண்டிக் கொள்ளுங்கள்.- சாய்பாபா