நேர்மையே சிறப்பு
UPDATED : பிப் 23, 2015 | ADDED : பிப் 23, 2015
* உங்களுக்குப் பிறர் செய்த தீமை, பிறருக்கு நீங்கள் செய்த நன்மை இரண்டையும் மறந்து விட முயலுங்கள்.* எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் வருந்தாதீர்கள். கடவுளின் விருப்பம் இதுவே என திருப்தி கொள்ளுங்கள்.* பண்பாடு இல்லாத மனித வாழ்வு இறக்கை இல்லாத பறவைக்குச் சமமானது.* வானுக்கு நிலவு அழகு தருவது போல மனிதனுக்கு நேர்மையே சிறப்பைத் தருகிறது.* எங்கும் அன்புப்பயிரை விதையுங்கள். சேவை என்னும் தண்ணீரால் அதை வளரச் செய்யுங்கள்.-சாய்பாபா