முயற்சியை தீவிரமாக்குங்கள்
* தொடக்கத்தில் கறையான் சிறிதாகவே தோன்றும். சிறுகச்சிறுக பெருகி, நாளடைவில் மரக்கட்டை முழுவதும் செல்லரித்துப் போகும். அதுபோல, தீய சிந்தனைகள் சிறிதாகவே தொடங்கும். ஆனால், முடிவில் ஒருவனை முற்றிலும் அழித்துவிடும். * உணவு உடனே ஜீரணமாக வேண்டும். அதுபோல ஒவ்வொரு நாளும் கேட்கின்ற நல்லசிந்தனைகளை அன்றைக்கே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அச்சிந்தனையைக் கேட்டதில் பயனில்லை.* சேற்றுநிலத்தை மெதுவாகப் பாயும் நீரோட்டத்தால் சரிசெய்ய முடியாது. வேகமாகவும், முழுமையாகவும், மூலை முடுக்கெல்லாம் அடித்துச் செல்லும் வெள்ளம் போல தண்ணீர் பாயவேண்டும். அதுபோல, ஆன்மிகத்தில் சாதனை செய்ய நினைத்தால் அரைமனதுடன் இறங்கக்கூடாது. இது ஆபத்தானது. * கிணற்றுக்கோ, ஏரிக்கோ அல்லது பரந்த சமுத்திரத்திற்கோ கூட நீர் எடுத்துவரச் சென்றாலும், நம் கையில் இருக்கும் பாத்திரத்தின் அளவுக்குத் தான் தண்ணீரை எடுக்க முடியும். அதுபோல, நம் செய்யும் செயலில் நம் முயற்சிக்கு தகுந்தவாறே பலன் கிடைக்கும். எனவே முயற்சியை தீவிரமாக்குங்கள்.
-சாய்பாபா