உள்ளூர் செய்திகள்

மனப்பக்குவம் வேண்டும்

* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு. அதுவே கடவுளுக்கு பிடித்தமானது.* கடவுளிடம் உன்னை அர்ப்பணித்து விடு. மனச்சமநிலை இழக்காமல் வாழக் கற்றுக் கொள்.* செய்யப் போவதைச் சொல்லுங்கள். சொன்னபடியே வாழ்வில் நடக்கவும் செய்யுங்கள். * உடல் பலம் மட்டுமே பலம் அல்ல. மனம் வலிமையோடு இருப்பது தான் நல்லது. * ஆசையை அடக்கவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மனப் பக்குவம் அவசியம்.* கவனத்தை உள்நோக்கி திருப்பு. நீ யார் எனப் புரியும்.- சாய்பாபா