தேடி வரும் சொர்க்கம்
UPDATED : நவ 03, 2014 | ADDED : நவ 03, 2014
* தலைவனாக இருக்க விரும்புபவன் முதலில் மற்றவருக்கு சேவகனாக இருந்து தொண்டாற்ற முன் வர வேண்டும்.* மனிதப்பிறவி மீண்டும் நமக்கு கிடைக்காமல் போகலாம். கிடைத்ததை நல்ல முறையில் பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.* எங்கு தேடினாலும் சொர்க்கத்தை அடைய முடியாது. ஒழுக்கமுடன் வாழ்ந்தால் சொர்க்கம் நம்மைத் தேடி வந்து விடும்.* தெய்வத்தை கோயில்களில் தேடுகிறோம். ஆனால், மனித உள்ளமே தெய்வம் விரும்பி வசிக்கும் வீடாகும்.- சாய்பாபா