பெற்றோர் நம் தெய்வம்
UPDATED : ஜன 15, 2013 | ADDED : ஜன 15, 2013
* வாழ்க்கை என்னும் நாணயத்திற்கு இன்பம், துன்பம் என இருபக்கங்கள் இருக்கின்றன.* உலகில் உள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. மாற்றம் என்ற ஒன்று மட்டுமே என்றைக்கும் மாறாதது. * மனித உடலை நமக்களித்த பெற்றோரை, கடவுளாக மதித்துப் போற்றுங்கள்.* குழந்தைகள் பஜனை, தியானம் போன்றவற்றில் ஈடுபட வழிகாட்டுங்கள். * 'நான்' என்ற ஆணவம் கொண்டவனை துன்பம் தொடரும். * சமூகப்பணியில் ஈடுபடுபவர்களிடம் தற்பெருமை கூடாது. மன அடக்கத்துடன் இறைவன் அளித்த வாய்ப்பாக எண்ணி தொண்டாற்றுங்கள்.* மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக தொண்டில் ஈடுபடாதீர்கள். அன்புக்காக தொண்டாற்றுவதே சிறந்தது.* வாழ்க்கை ஒரே திசையில் செல்லும் நீரோட்டம் என்பதால் பயனுள்ள வகையில் நேரத்தை செலவழிப்பதே அறிவுடைமை.- சாய்பாபா