உள்ளூர் செய்திகள்

மனத்தூய்மை அவசியம்

* ஆன்மிகப்பணி, போதனை, பிரார்த்தனை இவற்றுக்கும் அப்பால் உழைப்பால் புதியோர் உலகத்தை நம்மால் உருவாக்கி விட முடியும்.* பணம், பதவி, புகழ் எதுவும் நம்மோடு கூட வருவதில்லை. இவற்றையெல்லாம் இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள்.* ஆணவத்தால் செருக்குடன் திரிபவர்கள் வாழ்வு இனிப்பதில்லை. * தர்மத்தைப் பற்றி மணிக்கணக்காகப் பேச முடியும். ஆனால், அதை கடைபிடிப்பது மிகவும் கடினமானது.* வேதசாரத்தை அப்படியே கரைத்துக் குடித்த பண்டிதன் என்று வாழ்வில் பேர் எடுத்துவிடலாம். ஆனால், மனதில் தூய்மை இல்லாவிட்டால் துளியும் நன்மை உண்டாகாது. * உடல்நலமும், மனவலிமையும் கிடைக்கப் பெற்றவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்வதைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.* காலமே மிகவும் விலை உயர்ந்த பொருள். ஒருபோதும் காலத்தை வீணாக்கக் கூடாது. அது நம் வாழ்க்கையைப் பாதித்துவிடும்.- சாய்பாபா