நியாயமான வழிபாடு
UPDATED : டிச 13, 2015 | ADDED : டிச 13, 2015
* கடவுளிடம் நிம்மதியை வேண்டினால் போதும். அதுவே எல்லாருக்கும் சுகம் தரும் நியாயமான வழிபாடு.*நல்லவர்களை நாடுங்கள். அவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். பக்தி மார்க்கத்தில் முன்னேற இதுவே வழி.* மனிதனின் உடன்பிறந்த இயல்பு ஆசை. அதை படிப்படியாக திருத்திக் கொண்டால் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.* யாரையும் வெறுப்பது கூடாது. அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். தனித்து வாழாதீர்கள். மனம் விட்டு பிறரிடம் பழகுங்கள்.-சாய்பாபா