நல்ல உணர்வையும் தேடுங்கள்
UPDATED : மே 16, 2016 | ADDED : மே 16, 2016
* உணவைத் தேடுவது மட்டும் வாழ்க்கையல்ல. பக்தி என்னும் நல்ல உணர்வையும் தேடும் கடமை நமக்கு இருக்கிறது.* கடவுள் நடத்தும் நாடகத்தில் நாம் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம்.* தாயே குழந்தைக்கு தந்தையை அடையாளம் காட்டுகிறாள். அதுபோல வேதம் என்னும் தாய், நமக்கு தந்தையாகிய கடவுளைக் காட்டுகிறாள்.* கடமையைச் சரிவரச் செய்து வந்தால், அதற்குரிய பலனும் தானாகவே நம்மை வந்தடையும்.- சாய்பாபா