சேவை செய்யுங்கள்
UPDATED : மே 21, 2017 | ADDED : மே 21, 2017
*தேன் என்று சொன்னால் மட்டும் இனித்து விடாது. அது போல சேவை என்பது பேச்சில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும்.*மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது மந்திரச் சொல். இதை மதித்து நடந்தால் மகாதேவனே மகிழ்ந்து அருள்புரிவான்.*தன்னலம் கருதாமல் செய்யும் பொதுத்தொண்டு, கலப்படம் இல்லாத தங்கத்திற்கு சமமானது.*தொண்டு என்றதும் ஏதோ பெரிய செயல் என்று கருத வேண்டாம். பிறர் துன்பம் கண்டு ஆறுதல் கூறுவதும் சிறந்த தொண்டே.- சாய்பாபா