பிறர்நலன் பேணுங்கள்
UPDATED : நவ 08, 2018 | ADDED : நவ 08, 2018
* பிறர் நலனில் அக்கறை செலுத்தும் நற்குணமே கடவுளின் அருளைப் பெறுவதற்குரிய ஒரே வழி.* கடவுள் காரணமின்றி எதையும் படைக்கவில்லை. நீயும் நானும் கூட இதில் விதி விலக்கல்ல.* அன்பான எஜமானராக கடவுள் இருக்கிறார். அவருக்கு உண்மை வழி நடக்கும் ஊழியர்களை மட்டுமே பிடிக்கும்.* ஒவ்வொரு முறை மூச்சு விடும் போதும், கடவுளைச் சிந்திக்கப் பழகினால் இறுதி மூச்சு வரையும் இந்த நினைப்பு தொடரும்.- சாய்பாபா