உள்ளூர் செய்திகள்

முடிவு அவர் கையில்!

* கடவுள் நினைப்பில் முழுமையாக கரைந்து விடுங்கள். அவரை அடைய நேசிப்பதும், சுவாசிப்பதுமே தியானம்.* பக்தி என்பது பூஜை செய்வதோ, பஜனை செய்வதோ மட்டும் அல்ல. தொடர்ந்து கடவுளைப் பற்றி சிந்திப்பதே பக்தி. * மனம் ஒன்றி வேண்டுவது அனைத்தையும் கடவுள் அளிக்க தயாராக இருக்கிறார். எனவே, சரியானவற்றை கேட்பதில் எச்சரிக்கையாய் இருங்கள்.* எத்தனை சோதனை வாழ்வில் குறுக்கிட்டாலும், கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் அதனை எளிதாகப் போக்கி விட முடியும்.* முயற்சி மட்டுமே மனிதன் கையில் இருக்கிறது. அதில் கிடைக்கும் வெற்றியோ, தோல்வியோ கடவுளின் கையில் தான் இருக்கிறது.* முதலில் கடவுள், இரண்டாவது உலகம், மூன்றாவது நான் என்ற வரிசையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். - சாய்பாபா