உள்ளூர் செய்திகள்

கோபத்தின் பலன் குழப்பம்

* கடமையைக் கருத்துடன் செய்வது  மனிதரின் பொறுப்பு. பலனை வழங்குவது ஆண்டவனின் பொறுப்பு. * நமக்கு கிடைத்ததை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும். கிடைத்ததை பிறருக்கு  வழங்குங்கள். கிடைக்காவிட்டால், உங்களையே வழங்குவதே தியாக  உணர்வாகும். * மேலோட்டமான மற்றும் பயன்தராத புத்தக அறிவை விட, எதையும் அனுபவம் மூலமாகச் சோதித்து உணருங்கள். ஆழ்ந்த பயன் தரக்கூடிய அறிவைத்  தேடுவதுடன், அதன்மூலம் புத்தியை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.* கோபம் ஏற்படும் போது எந்தச் செயலையும் செய்யக்கூடாது. கோபம், பதட்டம், வேகம் இவை மூன்றும் சேர்ந்தால் குழப்பம் தான் ஏற்படும். விவேகம் இல்லாமல் கவலையே மிஞ்சும்.* பிரிப்பதும், பிரித்தாள்வதும் அரசியலுக்கு ஏற்றதாக இருந்தாலும், மனித வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவாது. மனிதனிடம் உள்ள தெய்வீகம் ஒற்றுமையில் வெளிப்படும். மனித சக்தி ஒற்றுமையில் தெய்வீகச் சக்தியாகிறது. பிரிவினையில் மிருக சக்தியாகிறது.- சாய்பாபா