வழிகாட்டும் ராம சகோதரர்கள்
* இறைவனை நாம் உணர்ந்து, தாயை நாடும் குழந்தையைப் போல மனப்பூர்வமாக பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். பிரார்த்தனை என்பது உதட்டளவில் இருக்காமல் இதயத்திலிருந்து கனிவுடன் வரவேண்டும்.* இறைவனை எப்படி அணுகினாலும், இதயபூர்வமான பக்தியின் மூலமாகவே அடைய முடியும். அதோடு அன்புடன் சேவை செய்யும் எண்ணமும் நமக்கு வேண்டும்.* ராமர், லட்சுமணன், பரதன், சத்ருக்கன் ஆகிய நால்வரும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை ஆகிய நான்கு உயர் லட்சியங்களை நமக்கு அடையாளம் காட்டுகின்றனர். மற்ற மூவர் ராமரை பின்பற்றுவது போல், நாமும் வாழ்க்கையின் லட்சியங்களான மூன்றையும் பெற சத்தியத்தை பின்பற்ற வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் உயர்ந்து மேன்மை அடைய முடியும்.* மனத்தை தூய்மைப்படுத்தி, தெய்வீகம் நிலைக்க காயத்ரி மந்திரம் உதவுகிறது. அத்துடன் நம்முடைய எண்ணங்களையும் செயலையும் உயர்வாக வைக்கிறது. ஞானத்தை அருளும் மந்திரமாகவும் உள்ளது.-சாய்பாபா