பணிவே பெருமை தரும்
UPDATED : ஜூன் 12, 2016 | ADDED : ஜூன் 12, 2016
* மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.* பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது. நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்.* அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் நம் பாரம்பரியமும், பண்பாடும் சிக்கிக் கிடக்கிறது.* பட்டம், பதவிக்காக மனிதன் அலைந்து திரியக் கூடாது. அது தானாகவே தேடி வர வேண்டும்.* நற்பண்பு இல்லாத மனிதன் உப்பில்லாத பண்டத்திற்குச் சமம்.- சாய்பாபா