உள்ளூர் செய்திகள்

வல்லவன்

வீட்டின் அருகே உள்ள காலி நிலத்தில் பயிர் செய்ய எண்ணினார் முல்லா. இதற்காக அதன் உரிமையாளரிடம், ''தங்களின் நிலத்தில் பயிர் செய்ய விரும்புகிறேன். விளைச்சலில் பாதியை உங்களுக்கு தருகிறேன். சம்மதம் தானே'' எனக் கேட்டார். அவரோ, ''பூமியின் மேல் பகுதியில் விளைவது எல்லாம் எனக்கு சொந்தம்'' என்றார். முல்லாவும் சம்மதித்தார். மூன்று மாதம் கழிந்த பின், மகசூலை எடுத்துச் செல்ல உரிமையாளர் வந்த போது ஏமாற்றமே மிஞ்சியது.கிழங்கு வகைகளை அதாவது பூமிக்கு கீழே விளையும் பயிர்களை பயிரிட்டிருந்தார் முல்லா. உடனே ஆவேசத்துடன், '' அடுத்த ஆண்டு பூமியின் கீழ் பகுதியில் உள்ளது எனக்கு'' என சொல்லி விட்டு உரிமையாளர் வேகமாகச் சென்றார். மீண்டும் அதே நிலை தொடர்ந்தது. அப்போது பூமிக்கு மேலே விளையும் கோதுமையை பயிரிட்டார் முல்லா. ''பேராசை வேண்டாம். இனியாவது திருந்துங்கள்'' எனச் சொல்லி, உரிமையாளருக்கு விளைச்சலில் பாதியைக் கொடுத்தார் முல்லா.வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருப்பான் அல்லவா...