தங்க மகன்
UPDATED : ஜன 02, 2026 | ADDED : ஜன 02, 2026
தாய் மீது அன்பு கொண்டவர் ஷர்புத்தீன். ஒருநாள் சோர்வாக படுத்திருந்த அவரின் தாயார், 'தாகமாக உள்ளது; தண்ணீர் கொண்டு வா' என்றார். ஆனால் மகன் வருவதற்குள் தாயார் துாங்கி விட்டார். எழுப்பினால் துாக்கம் கெடுமே எனக் கருதி எழுந்திருக்கும் வரை மகன் காத்திருந்தார். நள்ளிரவு ஆகி விட்டது. தற்செயலாக எழுந்த அவர், மகன் நிற்பதை பார்த்து, '' இன்னும் நீ துாங்கலையா'' எனக் கேட்டார். ''உங்களுக்கு தண்ணீர் தருவதற்காகவே காத்திருக்கிறேன்'' என்றார் ஷர்புத்தீன். தங்கமகனின் பாசத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறினார்.