சுத்தமாக இருப்போம்
ஒளு (நீரால் சுத்தம் செய்தல்) செய்த பிறகே தொழுகையில் பங்கேற்க வேண்டும். இப்படி பங்கேற்பவர்கள் கியாமநாளில்(இறைவனை சந்திக்கும் நாள்) முகம், கைகள், கால்களில் ஒளி படர்ந்தவர்களாக காட்சியளிப்பர். ஒளு செய்யும் நேரத்தில் முகத்தைக் கழுவினால் கண்களால் செய்த குற்றங்களும், கைகளைக் கழுவும்போது கைகளால் செய்த குற்றங்களும், கால்களைக் கழுவினால் கால்களால் செய்த குற்றங்களும் தண்ணீரின் கடைசி துளியுடன் வெளியேறும். முடிவில் அவர் பாவமற்றவராகி விடுவார். நபிகள் நாயகம் ஒளு பற்றி, '' கை, கால்களின் விரல்களை நன்கு கோதிவிட்டு சுத்தம் செய்யுங்கள். இச்செயலை முழுமையாகச் செய்தால் ஆயுள் நீடிக்கும். அதுபோல் குதிங்கால் நனையாதவர்களுக்கு நரகக்கேடு உண்டாகும். அதே நேரம் தண்ணீரை வீணாக்கக்கூடாது. ஒருமுறை இவர் சுபுஹு தொழுகையில் சூரத்துல் ரூம் என்ற அத்தியாயத்தை ஓதினார். அப்போது தொழுகை சிறிது நேரம் தடைபட்டது. அதற்கான காரணத்தை 'முறையாக ஒளு செய்யாமல் சிலர் தொழுகைக்கு வருகிறார்கள்' என கடிந்து கொண்டார்.