தர்மம் செய்யுங்கள்
கஞ்சத்தனம் உலகப் பேராசையின் அடையாளமாகும். அடியானின் கஞ்சத்தனத்தையும் கோழைத்தனத்தையும் இறைவன் வெறுக்கிறான். குடும்பத்தினருக்கு தாராளமாக அனுமதியளிக்கப்பட்ட செலவு செய்பவர்களின் பொருளில் அவன் அபிவிருத்தி செய்கிறான். இது குறித்து நபிகள் நாயகம் கீழ்க்கண்டவற்றை கூறுகிறார். கஞ்சத்தனத்தைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கிறேன். ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகம் இதனால் அழிந்துவிட்டது. பேராசை அவர்களை உலோபியாகுமாறும் பாவம் செய்யுமாறும் ஏவியது. அவர்களும் அதைச் செய்தனர். எளிய மக்கள், வழிப்போக்கர்கள், இறைப்பணிகள் செய்பவர்களுக்கு கொடுங்கள். இதனால் இறைநம்பிக்கை அதிகமாவதுடன் நன்மைகளும் கிடைக்கும். நபி யஹ்யா ஒருமுறை ஷைத்தானிடம், ''உனக்கு எல்லோரைக் காட்டிலும் அதிக விருப்பமுள்ள மனிதன் யார்'' எனக்கேட்டார். அதற்கு, ''கஞ்சன் மீது எனக்கு விருப்பம் உள்ளது. காரணம் உலோபித்தனத்தனமே நரகத்திற்கு அவனை இழுத்துச் செல்ல போதுமானது. தர்மம் செய்பவனை வெறுக்கிறேன்'' என்றான்.