உள்ளூர் செய்திகள்

மென்மையும் நன்மையும்

பிறரிடம் மென்மையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்பவரே சிறந்தவர். இந்த பண்பு எந்த விஷயத்தில் இருந்தாலும் அழகுணர்வை உண்டாக்கும். எந்த விஷயத்தில் மென்மை, நிதானம் இல்லையோ அது கோரமாகி விடும். 'நன்மையும் தீமையும் சமம் ஆகாது. ஆதலால் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். அந்நிலையில் கொடிய எதிரியைக் கூட நல்ல நண்பனாகப் பார்ப்பீர்கள். பொறுமை உடையோரைத் தவிர மற்ற யாரும் இதை அடைய முடியாது' என்கிறது குர்ஆன். இறைவனும் இப்பண்புகளை விரும்புகிறான். ஏனெனில் அவன் மென்மையானவன்.