உள்ளூர் செய்திகள்

தொடரும் பந்தம்

இன்று தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தண்ணீரைப் போல உயர்ந்த பொருள் உலகிலேயே கிடையாது. அதன் அருமையை உணர்வது மிக அவசியம். ' தண்ணீர் சாதாரணமானது தானே. இதை வீணாக்கினால் தவறில்லை' எனக் கருதுவது கூடாது. நண்பரின் வீட்டிற்கு சென்ற நபிகள் நாயகம் ஒரு குவளையில் தண்ணீர் வாங்கி குடித்தார். அப்போது, ''தண்ணீர் குறித்து இறைவனுக்கு நன்றி சொல்லாவிட்டால் மறுமை நாளில் இது குறித்து கேள்வி கேட்கப்படும்.'குளிர்ந்த நீரால் உன் தாகத்தை நான் தீர்க்கவில்லையா?' என்பது தான் அங்கு முதல் கேள்வியாக இருக்கும். எனவே ஒருபோதும் தண்ணீரை வீணாக்காதீர்கள்'' என வலியுறுத்தினார். உயிர்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடை தண்ணீர். மறுமை நாளிலும் தண்ணீருக்கும், நமக்குமான பந்தம் தொடரும்.