நல்லதே நடக்கும்
UPDATED : ஜூலை 12, 2024 | ADDED : ஜூலை 12, 2024
பணக்காரர் ரஹீம் மாட்டு வண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்யவே, வண்டியின் சக்கரம் சேற்றில் மாட்டிக் கொண்டது. அருகில் இருந்த வீட்டில் உதவி கேட்ட போது அங்கிருந்தவர் ரஹீமிடம் முன்பு பணியாற்றிய அப்துல் மாலிக். ''ஐயா... உள்ளே வாருங்கள்'' என்றான். தனக்காக இருந்த கொஞ்ச உணவை பெருந்தன்மையுடன் கொடுத்தான் மாலிக். ஆனால் பணியாளரின் கஷ்டத்தை உணர்ந்த அவர் அதை ஏற்கவில்லை. மழை நின்றதும் புறப்பட்டார். காலப்போக்கில் ரஹீம் எடுத்த தவறான முடிவுகளால் கடனாளியானார். ஆனால் மாலிக் வியாபாரம் செய்து பணக்காரர் ஆனார். இந்நிலையில் ஒருநாள் ரஹீமைக் காண தானியம், காய்கறிகள், பழங்களுடன் மாலிக் சென்றான். அதைக் கண்டதும் கண்ணீர் சிந்தவே, ''வருந்தாதீர்கள். தவறு நடப்பது இயற்கையே. எல்லாம் நல்லதே நடக்கும்'' என்றான் மாலிக்.