உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / வெட்டி பந்தா உதவாது!

வெட்டி பந்தா உதவாது!

'இந்த காலத்தில் ஆர்ப்பாட்டமான அரசியல் எல்லாம் வேலைக்கு ஆகாது...' என, ஆந்திர மாநில காங்., தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடந்தது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் - பா.ஜ., கூட்டணி மற்றும் ஷர்மிளா தலைமையிலான காங்கிரஸ் என, மூன்று அணிகள் போட்டியிட்டன. ஷர்மிளா, ஜெகன்மோகனின் சகோதரி. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் தான், இவர் காங்கிரசில் சேர்ந்தார். உடனடியாக மாநில தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. திடீர் போராட்டம், ஆவேச பேச்சு, வெட்டி பந்தா என, ஆர்ப்பாட்டமாக அரசியல் களத்தில் இறங்கினார், ஷர்மிளா. ஆனால், தேர்தல் முடிவுகள், ஷர்மிளாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்தது. லோக்சபா தேர்தலிலும், தெலுங்கு தேசம் - பா.ஜ., கூட்டணியே வெற்றிக்கொடி நாட்டியது.காங்கிரசுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. கடப்பா லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட ஷர்மிளாவே, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். 'வெட்டி பந்தா, அரசியலுக்கு உதவாது என்பதை ஷர்மிளா இனியாவது உணர்ந்தால் சரி...' என்கின்றனர், ஆந்திர பொதுமக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை