உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / தலையை உருட்டலாமா?

தலையை உருட்டலாமா?

'எந்தெந்த விஷயத்திற்கு தான், முதல்வர் மீது குற்றம் சுமத்துவது என்பதில், ஒரு நியாய தர்மம் வேண்டாமா...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாரின் ஆதரவாளர்கள் பொருமுகின்றனர். பீஹாரில், கடந்த 10 நாட்களில் மட்டும் ஏழு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இங்கு பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் இடிந்து விழுகின்றன.இதில், பழைய பாலம், புதிய பாலம் என்ற வித்தியாசம் இல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலங்களும், தற்போது கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் பாலங்களும் இடிகின்றன. பீஹார் எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ், இந்த விஷயத்தை கையில் எடுத்து மாநிலம் முழுதும் போராட்டங்களை நடத்தி வருகிறார். பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும், 'பீஹாரில் ஒப்பந்த பணிகளில் ஊழல் மலிந்து விட்டது. தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி கட்டப்படுவதால் பாலங்கள் இடிகின்றன...' என, புகார் கூறுகிறார்,'இடிந்த பாலங்களில் சில, தேஜஸ்வியின் தந்தை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த போது கட்டப்பட்டவை...' என்கின்றனர். நிதீஷ் கட்சியினர். 'எப்போதோ கட்டப்பட்ட பாலத்துக்கு, என் தலையை உருட்டுகின்றனரே...' என கவலைப்படுகிறார், நிதீஷ் குமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி