உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தி.மு.க.,வைச் சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன்: பிரதமர் மோடிக்கு எந்த நேரமும் தி.மு.க.,வை பற்றியும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும் தான் சிந்தனை. ஹிட்லரை தோற்கடித்தவர் ரஷ்ய தலைவர் ஸ்டாலின். மோடியை தோற்கடிக்க, நம் ஸ்டாலின் பிறந்துள்ளார்.டவுட் தனபாலு: மோடியை தோற்கடிக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர் ஸ்டாலின் என்று சொல்கிறாரே... பிரதமர் பதவிக்கு தகுதியானவர் தன் தலைவர் மட்டும் தான்னு, 'இண்டியா' கூட்டணி கட்சிகளுக்கு நாசுக்கா சுட்டிக்காட்டுறாரோ என்ற, 'டவுட்' தான் வருது! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரமணா: ஆட்சி அதிகாரத்தை தி.மு.க.,வினர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். ஊழல் செய்வதையே நோக்கமாக வைத்துள்ளனர். தற்போது, தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தி.மு.க.,வினர் தொடர்பில் உள்ளனர்.டவுட் தனபாலு: ஜாபர் சாதிக் சம்பவத்தை தான் சுட்டிக்காட்டுறீங்க என்பது நன்றாக தெரிகிறது... ஆனா, அ.தி.மு.க., ஆட்சியில நடந்த, 'குட்கா' ஊழல்ல உங்க பெயரும் அடிபட்டுச்சே... குட்கா என்பது உடலுக்கு நன்மை தரும் பண்டம்னு நினைச்சுட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்தவர். ஆனால், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை, தன் கட்சியில் சேர்க்கும் வேலையை செய்து வருகிறார். ஜனநாயக போர்வையில் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் மோடி.டவுட் தனபாலு: சமூக விரோதிகளை கட்சியில சேர்க்கிறதை பத்தி நீங்க பேசலாமா...? பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு போதை மருந்து கடத்தல் சாம்ராஜ்யத்தையே நடத்திய ஜாபர் சாதிக்கை இத்தனை நாட்களா கட்சியில வச்சிருந்தவங்க, மற்ற கட்சியை குற்றம் சாட்டலாமா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை