உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ரூ.921 கோடி சொத்து காட்டியவர் மனு தள்ளுபடி

ரூ.921 கோடி சொத்து காட்டியவர் மனு தள்ளுபடி

மதுரை: இந்த தேர்தலில் ஈரோட்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் 'ஆற்றல்' அசோக்குமார் அதிபணக்காரராக உள்ளார். அவரைவிட அதிக சொத்து இருப்பதாக கணக்கு காட்டிய ஒருவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.அவர் திருப்பரங்குன்றம் தோப்பூரைச் சேர்ந்த கன. வேழவேந்தன் 50. வேட்புமனு தாக்கலின் போது கடைசி நாளில், கடைசிக்கு முந்தைய நபராக வேக வேகமாக வந்தார். மனுதாக்கல் முடிய சில நிமிடங்களே இருந்ததால் அவருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. கடைசி ஆளாக மனுதாக்கல் செய்து திரும்பினார்.மனுக்கள் பரிசீலனையின்போது அவரது மனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்ற காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தன் மனுவில் அவர் காட்டியிருந்த சொத்து மதிப்பு 921 கோடி ரூபாய். தாயாரின் புடவை 2 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். தமிழகத்திலேயே இந்தளவு சொத்து மதிப்பை யாரும் இதுவரை காட்டியதில்லை. வழக்குகள், கடன்கள், நிதி நிறுவன முதலீடு, வாகனங்கள் உட்பட 90 சதவீத கேள்விகளுக்கு 'இல்லை' என்றே தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'நான் திருச்சி மாவட்டம் மாம்பட்டி ஜமீன் வாரிசு. துங்கபத்ரா முதல் கன்னியாகுமரி வரை எங்கள் ஆளுகையில் இருந்தது. 2011ல் ஏற்கனவே போட்டியிட்டு 300 ஓட்டுகள் வாங்கியுள்ளேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kulandai kannan
மார் 31, 2024 15:45

திமுகவில் சேரவேண்டிய ஆள்.


மருதைராஜ்
மார் 30, 2024 07:30

வருமானவரி அதிகாரிகள் கவனிக்க. போட்டுத் தாக்கினா அபராதம், 15000 கோடிக்கு வருமானவரி நோட்டீஸ் விடலாம்.


Radhakrishnan Seetharaman
மார் 30, 2024 05:52

வெயில் அதிகமாகி விட்டது ?


panneer selvam
மார் 29, 2024 22:12

Poor guy , now all his properties are initially occupied by, Arcot Nawab , then British and after that Indian government Tamilnadu government has to do something for him


Raj
மார் 29, 2024 06:55

அரசியல்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை