| ADDED : ஜூலை 29, 2022 12:16 AM
சேத்துப்பட்டு :சேத்துப்பட்டு அருகே, குழந்தை வரம் வேண்டி பெண்கள், மண்டியிட்டு, மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமிகளின், 186வது குருபூஜை விழா, ஆடி அமாவாசையன்றுநடப்பது வழக்கம்.அதன்படி நேற்று நடந்த விழாவில், குழந்தை பாக்கியம் இல்லாத ஏராளமான பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டி கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றனர்.பரதேசி ஆறுமுக சுவாமிக்கு படையலிட்ட பிரசாதத்தை சாதுக்கள் வழங்க, அதை பெண்கள் சேலை மடியில் பெற்று, அங்குள்ள குளக்கரையில் வைத்து, கைகளை பின்புறம் கட்டியவாறு மண்டியிட்டு, மண் சோறு சாப்பிட்டனர்.இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இங்கு வழிபாடு நடத்தி, குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பணம், தானியம் உள்ளிட்ட பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.