உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / நடிகர்கள், அரசியல்வாதிகள் உதவலாமே!

நடிகர்கள், அரசியல்வாதிகள் உதவலாமே!

ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊரக பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன், 5,000 நீர்நிலைகளை புனரமைக்க, தமிழக அரசு முடிவு என்ற செய்தி வெளியாகி உள்ளது.நீரும், விவசாயமும் இரு கண்கள்.மழைக் காலத்தில் பெய்யும் மழை நீரை சேமிக்க அணை உருவாக்கிய வெளிநாட்டவரான பென்னிகுவிக், தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் மற்றும் காமராஜர் உள்ளிட்ட தமிழக ஆட்சியாளர்களை நாம் மறக்க இயலாது.ஆனால், அக்காலம் மறைந்து விட்டது. இப்போது அரசியல் செய்வது குறித்து ஆழ்ந்து யோசிப்பதிலேயே, முழு நேரத்தையும் அரசியல்வாதிகள் செலவழிக்கின்றனரே தவிர, மக்கள் நலன் குறித்தோ, எதிர்கால திட்டங்கள் குறித்தோ கவலைப்பட நேரம் ஒதுக்குவதில்லை.கிட்டத்தட்ட, 35 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் செய்த தவறால், இன்று நாம் தண்ணீருக்குத் தவிக்கும் நிலை உருவாகி விட்டது. அதற்குத் தீர்வு காணக் கேட்டால், இப்போது நம்மையே சாலையில் இறங்கச் சொல்கிறது அரசு.நாம் இறங்கினால் தான் வேலை நடக்கும் என்றால், அதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னதாக...நாளுக்கு நாள் மீட்டர் போட்டு சம்பாதிக்கும் அரசியல்வாதிகளும், நடிகர்களும், நடிகையரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? அவர்களின் பணத்தில், குறிப்பிட்ட தொகையை மாநிலத்திற்கு எனக் கொடுத்தால், மொத்த தமிழகமும் தலைநிமிருமே?நீர்நிலைகளை புனரமைக்க, மக்களுக்கு அழைப்பு விடும் அரசு, முதலில் அரசியல் வாதிகளிடமும், நடிகர், நடிகையர், மிகப் பெரிய தொழிலதிபர்கள் என, பணம் படைத்தவர்களிடம் அல்லவா கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? இந்த அரசுக்கு, இப்படி எக்குத்தப்பாக யார் தான் ஆலோசனை சொல்கின்றனரோ தெரியவில்லை!ஆலோசனை சொல்பவர்கள் கிடக்கட்டும்; தலைமை என்ன செய்கிறது? ஒன்றும் புரியவில்லையப்பா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

S Ramkumar
மே 20, 2024 11:34

எழுபதுகளில் அரசாங்க அதிகாரிகளுடன் கிராமத்து விவசாய நில உரிமையாளர்கள் சேர்ந்து வாய்க்கால் மராமத்து பணிகள் ஆண்டு தோறும் கோடை காலங்களில் நடை பெற்று வாய்க்கால்கள் உயிர்ப்போடு இருந்தன என்று அரசாங்கம் இதெல்லாம் கான்ட்ராக்ட்டு காரர்களுக்கு கொடுக்க ஆரம்பித்த்து பிறகு நூறு நாள் வேலை மூலம் எய்யப்படும் என்று இந்த வேலையெல்லாம் படு குழியில் தள்ளி விட்டது


Jeyaraj P-pambanar
மே 14, 2024 12:26

ஒருவேளை, இப்போது காமராஜர் முதல்வராக இருந்திருந்தால், ஓட்டுக்கான இலவச திட்டங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மீதமாகும் அந்தப் பணத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தியிருப்பார் திராவிட மாடல் ஆட்சியில் அப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது இவர்கள் மக்கள பங்களிப்புடன் நீர்நிலைகளை சீரமைத்துவிட்டு, அதற்கு, கள்ளக் கணக்கு எழுதி பணத்தை வேண்டுமானால் கொள்ளையடிப்பார்கள்


பொ.ஜெயராஜ், பாம்பனார், கேரளா .
மே 14, 2024 10:53

Sir, "இது உங்கள் இடம்" பகுதியில் வெளியாகியுளை மூன்று கடிதங்களில், 1 மட்டும் தான் Online ல் வந்துள்ளது. மற்ற கடிதங்களும் online ல் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.


angbu ganesh
மே 14, 2024 09:54

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்னா லாபம், எவ்ளோ சம்பாரிச்சு ஏழு எட்டு தலைமுறைக்கு சேர்த்தாச்சு, அதும் இவனுங்கள நம்பி வோட்டு ஜனங்க கிட்ட இருந்தே கொள்ள அடிச்சு


D.Ambujavalli
மே 14, 2024 06:49

ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து ஆனமட்டும் சம்பாதிக்கத்தான் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு நீர் வேண்டும், விவசாயம் நடக்க வேண்டுமென்றால் புனரமைப்பை நீங்களே செய்துகொள்ளுங்கள் என்பதுதானே அவர்களது கொள்கை


veeramani
மே 14, 2024 06:49

நீர் நிலைகளை பராமரிக்க குடிமராமத்து முறை உள்ளது பாண்டியமன்னன் வரகுணபாண்டியரின் காலத்த்தில் வைகை நதி பராமரிக்க சிவபெருமானே வந்ததாக ஐதீகம் மதுரையில் இன்றும் விழா நடைபெறுகிறது நீர் நிலைகளை மக்களும் ஊராட்சிகளும் பராமரிக்கலாம் ஒரே ஒரு கேள்வி பின்னர் பொதுப்பணித்துறை எதற்கு அதிகாரிகளின் செயற்பாடுகள் என்ன தமிழக அரசு மழைநீரை சேமிக்க வழிகள் செய்யவில்லையென்றால் சிங்கப்பூர் போல நன்னீர் இறக்குமதி செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்


புதிய வீடியோ