உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / மோடிக்கு பெரும்பான்மை தராதது தவறு!

மோடிக்கு பெரும்பான்மை தராதது தவறு!

செ.சரவணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 10 ஆண்டு காலமாக எந்தவித குறைபாடும் இல்லாமல், எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்காமல், தேச முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து, நாட்டை வழிநடத்தியவர் பிரதமர் மோடி. கொரோனா போன்ற இக்கட்டான கால கட்டங்களிலும், தடுப்பூசிகளை இலவசமாக மக்களுக்கு வழங்கி, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றியவர் அவர்.உலகமே மெச்சக்கூடிய வகையில் ஆட்சி செய்து, உலகில் சூப்பர் பவர் நாடாக இந்தியாவை உயர்த்த, உன்னத லட்சியத்துடன் பாடுபட்ட மோடிக்கு, இந்த தேர்தலில், பெரும்பான்மைக்கும், 32 இடங்கள் குறைவாகவே, இந்திய மக்கள் அளித்துள்ளனர். இதில், நம் தமிழக மக்களின் பங்கும் உண்டு.அவர் மட்டும் பெரும்பான்மை பெற்றிருந்தால், நமக்கும், நம் சந்ததிக்கும், நம் நாட்டிற்கும் தானே நன்மை. மோடி ஆட்சியில் கிடைத்த அனைத்து வித சலுகைகளையும், உரிமைகளையும் அனுபவித்து விட்டு, இம்முறை அவருக்கு தனிப் பெரும்பான்மை கொடுக்காமல், மற்ற கட்சிகளின் தயவில் மோடி ஆட்சியை தொடரச் செய்தது நியாயம் தானா?நம் நாட்டின் வளர்ச்சியையும், தேச பாதுகாப்பையும், லஞ்ச லாவண்யமற்ற அரசையும் விரும்பாத சிலரின் சூழ்ச்சிக்கு ஆளானவர்கள், மோடி ஆட்சி அமையாமல் போயிருந்தால், நாட்டுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை உணர்வரா? தற்போது, தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள கட்சிகள், மோடியின் ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்க உறுதுணையாக இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் போன்ற அதிரடியான முடிவுகளை மோடி எடுக்க நினைத்தாலும், ஓட்டு வங்கியை மனதில் வைத்து, கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்குமே.எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக நாம் செலுத்திய ஒவ்வொரு ஓட்டும், நமக்கு நாமே வைத்துக் கொண்ட ஆப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

சுதாரிக்கணும் பழனிசாமி!

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க.,விலிருந்து தனியே பிரிந்து சென்றவர்களுக்குப் பின், 1 சதவீதம் அதிகமாக ஓட்டு வாங்கியுள்ளோம். இதனால், அ.தி.மு.க., எப்போதும் இருப்பது போல பலமாகத் தான் இருக்கிறது' என்கிறார் பழனிசாமி.தி.மு.க., கூட்டணி, 2019ல் பெற்ற ஓட்டுகளை விட, 2024ல் 6.59 சதவீதம் குறைவாகத் தான் பெற்றுள்ளது. பா.ஜ., கூட்டணி, சென்ற லோக்சபா தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட, 0.2 சதவீதம் குறைவாகத் தான் பெற்றுள்ளது' என்று புள்ளி விபரங்களை அடுக்கி, அ.தி.மு.க., அடைந்த தோல்வியை ரொம்ப சாதுர்யமாக பழனிசாமி மறைத்துள்ளார். தமிழக மக்கள், லோக்சபா தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட்டாலும், சட்டசபை தேர்தலில் அதே கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட மாட்டர்.எனவே, 2026ல் நடைபெறப் போகும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பழனிசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.வரும் சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இறங்கப் போகிறது. கமல் கட்சி எதனுடன் ஒட்டிக் கொள்ளுமோ தெரியவில்லை. எனவே, போட்டி கடுமையானதாகத் தான் இருக்கும்.தன் கட்சியில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர் என, பழனிசாமி சொன்னது, 'கப்சா' என வெட்டவெளிச்சமாகப் புரிந்து விட்டது.இந்தப் பக்கம் தி.மு.க.,வோ, 200 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் சொல்கிறார். கூட்டணி வலுவாக உள்ளதால், அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.எதற்கு இவ்வளவு சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்ற ரீதியில் பழனிசாமியின் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது என்பதற்காகத் தான்.சுதாரிப்பது நல்லது!

சசிகலா 'அளந்து விடுவது' ஏற்புடையதல்ல!

எம்.நாகராஜன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மனித கடவுள் எம்.ஜி.ஆருடன் அரசியல் பேசியதாகவும், மறைந்த ஆர்.எம்.வீரப்பன், அரசியல் ரீதியாக ஜெ.,வுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், சசிகலா திருவாய் மலர்ந்தருளிஉள்ளார். இது குறித்து, சில உண்மை தகவல்களை பார்க்கலாம்... எம்.ஜி.ஆர்., 1984ல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது, தமிழகத்தில் தி.மு.க.,வினர் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதாவது, எம்.ஜி.ஆர்., மறைந்து விட்டதாகவும், தமிழகத்தில் அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஜெயிப்பதற்காக, அவர் உயிருடன் இருப்பதாக அ.தி.மு.க., தரப்பு கதை கட்டுவதாகவும் கூறினர்.இதை முறியடிக்க திட்டமிட்ட ஆர்.எம்.வீரப்பன், அமெரிக்க மருத்துவமனையில், டாக்டர்களுடன் எம்.ஜி.ஆர்., பேசியது, அவர் உணவு சாப்பிடுவது மற்றும் பேப்பர் படிப்பது போன்றவற்றை வீடியோக்கள் எடுத்து, தமிழகம் முழுதும் டெம்போ வேன்களில் அந்த வீடியோவை போட்டு காட்டினார். இதன் வாயிலாக எம்.ஜி.ஆர்., உயிருடன் இருப்பதை உணர்ந்த தமிழக மக்கள், மீண்டும் அ.தி.மு.க.,வையே ஆட்சி கட்டிலில் அமர்த்தினர். இது வரலாற்று உண்மை.சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆருக்கு கடைசி வரை உறுதுணையாக இருந்தது ஆர்.எம்.வீரப்பனும், கே.ஏ.கிருஷ்ணசாமியும் தான். இவர்கள் இருவரும், எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் ஜானகி அணியில் இருந்தனர். ஜெ., 1982ல் தான் அ.தி.மு.க.,வுக்குள் வந்தார். அப்போது, அவருக்கு மிகவும் சீனியர் ஆர்.எம்.வீரப்பன். 1987ல் எம்.ஜி.ஆர்., காலமாகி விட்டார். இடையில் ஐந்து ஆண்டுகளில் ஆர்.எம்.வீரப்பன், ஜெ.,வுக்கு தொந்தரவு கொடுக்கவும் இல்லை. எம்.ஜி.ஆருக்கு அடுத்த நிலையில் இருந்த அவருக்கு அதற்கான அவசியமும் இல்லை.எம்.ஜி.ஆரை சசிகலா பார்த்திருக்கலாம். காரணம், அவரது கணவர் நடராஜன், அரசு அதிகாரியாக முக்கிய பொறுப்பில் இருந்த வகையில், எம்.ஜி.ஆரை எங்காவது பார்த்திருக்கலாம். அதற்காக, 'அவருடன் அரசியல் பேசினேன்' என, 'அளந்து விடுவது' ஏற்புடையதல்ல.தற்போது வரை, எம்.ஜி.ஆருடன் சசிகலா இருப்பது போன்ற எந்த படத்தையும் யாரும் பார்த்தது இல்லை. எனவே, மறைந்தவர்கள் வந்து மறுக்கவா போகின்றனர் என்பதற்காக, சசிகலா இஷ்டத்துக்கு பேசுவது முறையல்ல!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

doss
ஜூன் 25, 2024 20:25

10 ஆண்டு ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தவர் மோடி.பல அரசாங்க நிறுவணங்களை விற்றவர் .இந்திய இரயில்வேயையும் தனியார்மயமாக்கியவர்.மக்களை பணமதிப்பிழப்பில் பாடுகளை அனுபவிக்க வைத்தவர்.சொன்னபடி ஙருப்பு பணத்தை கொண்டுவர இயலாதவர்.2௦௦௦ருபாய் நோட்டை செல்லததாக்கியவர்.ரப்பேல் விமானத்தினை வாங்கிய பேரத்தில் வெளித்தன்மை இல்லை. பல கோடி ஊழல் என்று சி எ ஜி அறிக்கை.அது குறித்து ஒரு கருத்தும் இல்லை.மணிப்பூர் கலவரம் ஒருமுறை கூட நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு சொல்லவில்லை.தமிழர்களை திருடர்கள் என்று சித்தரித்தவர்.பகை வளர்த்தவர்.இப்போது சொல்லுங்கள்.இவருக்கு ஓட்டு போட்டதே தவறு


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 27, 2024 07:06

டோஸ் வாட்சுபில் வந்த பொய்களை அப்படியே இங்கே எழுதி உள்ளேர்கள். ராகுல் கான் போலி காந்தி, ரபேல் விமான விஷயத்தில் பொய் சொன்னதாக நீதி மன்றத்தில் மன்னிப்பு கேட்டதை அய்யா வசதியாக மறந்து விட்டார்கள். ரயில்வே தனியார்மயநதா? எவ்வளவு பெரிய பொய்? உன்னை போன்ற கொத்தடிமைகள் இருப்பதால் தான், சைக்ளில் சென்று கொண்டு இருந்த ஊழல் செய்து பத்து தலைமுறைக்கு சேர்த்த திருட்டு திராவிட கழிசடைகள் வெற்றி பெறுகிறார்கள். வெட்கக்கேடு.


ROJA
ஜூன் 25, 2024 17:43

எதிர் கட்சிகளுக்கு வாக்களிப்பது மூலம் திட்டங்கள் ஏதும் வராது என்பது நியாயமா ?


hariprasad elangeswaran
ஜூன் 25, 2024 07:45

ஒன்று சொல்லுங்கள். அஜித் பவார் ஊழல் செய்தார் என்று மோடி ஏன் கூறினார்? பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன் ஊழல் எல்லாம் எப்படி ஒழிந்தது? இப்படித்தான் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குகிறார்?இது பேரழிவுக்கான விதை.தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவில் இணைந்தவர்கள் ஏராளம்.பத்து வருடங்கள் மக்கள் அவரை பெரும்பான்மையுடன் உட்கார வைத்தனர்.இன்று தவறு கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் வாக்களித்தனர்.இப்போது அதே மக்கள் சுயநலவாதிகளா? அனைவரும் முட்டாள்கள் அல்ல. எல்லா மக்களும் பணத்திற்காக வாக்களிப்பதில்லை. மதவாதம் எப்போதும் ஒரு விஷம். அதேபோல் வந்தே பாரத் சுமூகமாக இயக்க மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகின்றன.வந்தே பாரதத்தில் பயணம் செய்ய அனைத்து இந்தியர்களிடமும் பணம் இருக்கிறதா? முன்பதிவு செய்யப்படாத சாதாரண பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு மாற்று என்ன? அவர்கள் நடக்க வேண்டுமா?மோடி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனத்தையாவது சொல்லுங்கள். எத்தனை விற்கப்பட்டது? தமிழகம் வளர்ச்சியடையவில்லை என்றால், தமிழக அரசை ஏன் மத்திய அரசு பாராட்டுகிறது? மத்திய அரசு அளித்துள்ள தமிழக புள்ளிவிவரம் என்ன? பாஜக ஆளும் மாநிலங்கள் வளர்ச்சிக்காக போராடுவது ஏன்? இங்கே பேசுவதற்கு முன் உங்களிடம் ஆதாரம் இருக்க வேண்டும்


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 25, 2024 04:39

சரவணன் எழுதிய கருது எனது எண்ணங்களையும் பிரதிபலித்தது. மோடிஜிக்கு வோட்டை போடாததால் அவருக்கு ஏதும் நஷ்டம் இல்லை. நாம் தான் மறுபடி திருட்டு திராவிட கொள்ளைகாரர்களை கேன்டீனில் வடை டீ சாப்பிட அனுப்பியிருக்கிறோம். அந்த அளவிற்கு தமிழர்கள் புத்திசாலிகள்.


Kumar
ஜூன் 25, 2024 20:21

உண்மை


முருகன்
ஜூன் 24, 2024 17:54

சரி விடுங்க பாஸ் பேசிருப்பாங்க கருணாநிதி வேவு பார்க்க செட் அப் பண்ணி அனுப்பப்பட்டவங்கதானே சசிகலா மற்றும் நடராஜ பெருங்குடி கள். பாவம் அந்த அம்மையார் ஜெயலலிதா தனது சகோதரர் குடும்பத்தை அருகிலேயே வைத்திருந்தால் இப்படி ஒரு பரிதாபமாக உயிரிழந்திருக்க மாட்டார்.


madhumohan
ஜூன் 24, 2024 17:12

நன்றாக பணியாற்றி இருந்தால் இந்நிலைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை.


Thiruvenkatasamy Kannapiran
ஜூன் 24, 2024 15:54

நீங்கள் கூறுவது உண்மை. இந்தியா வில் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இதற்கு மோடி 10 ஆண்டு காலா ஆட்சியில் என்ன செய்தார்?


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 25, 2024 04:34

வேலை இல்ல திண்டாட்டம் உழைக்காமல் சோறு திங்க நினைப்பவர்களுக்குத்தான்.


Anantharaman Srinivasan
ஜூன் 24, 2024 15:35

உண்மையில் கடந்த பத்தாண்டுகள் மோடி ஆட்சி சிறப்பாகயிருந்திருந்தால் தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கும் .எதிர்கட்சிமேல் மக்களுக்கு நம்பிக்கையில்லாமையால் தான் மூன்றாவது முறையாக கூட்டணி ஆட்சியில் மோடி தொடரமுடிகிறது. ஆக தனி பெரும்பான்மை இல்லாமையால் எடுத்தேன் கவுத்தேன் என்று மோடி செயல்பட முடியாது. இதுவும் ஒரு விதத்தில் நல்லதற்கே.


MADHAVAN
ஜூன் 24, 2024 10:38

தகுதி இல்லாத மோடி, மோடிக்கு ஆட்சி அமைக்கும் தகுதி இல்லை, மோடிக்கு ஆதரவை விழுந்த ஓட்டைவிட எதிராக விழுந்த ஓட்டுகள் அதிகம், சும்மா பொத்தம் பொதுவா பேசாதீங்க,


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 25, 2024 04:36

அய்யா கொத்தடிமை அறிவாளி, பிஜேபி எத்தனை இடங்களில் ஜெயித்தது தெரியுமா? தமிகளத்தில் உங்ககளை போன்ற கொத்தடிமைகள் ஊழல் செய்து குடும்பத்திற்கு பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் கொள்ளைக்காரர்களும் 200ரூபாய்க்கு ஆசைப்பட்டு வோட்டை போட்டர்கள். வெட்கக்கேடு. .


Angappan M
ஜூன் 24, 2024 09:41

ஆமாம் சுயநலவாதிங்க தான் அதனால் தான் தங்கள் எதிர்காலம் நல்லா இருக்க மோடிக்கு மெஜாரிட்டி தரவில்லை. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லைனு புலம்புவதிற்கு பதில் மக்கள் நம்பிக்கையை எப்படி பெறுவது என்று யோசிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை