உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கேட்டதெல்லாம் கிடைக்குதா?

கேட்டதெல்லாம் கிடைக்குதா?

கோவை மாநகராட்சி பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்தது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுடன் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.அப்போது, அதிக மாணவர்கள் தோல்வியடைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார். தலைமை ஆசிரியர் ஒருவர், 'குறிப்பிட்ட பாடம் நடத்தும் ஆசிரியர் மருத்துவ விடுப்பில் இருந்தார். அதனால், தேர்ச்சி சதவீதம் குறைந்தது' என்றார்.இதைக் கேட்டு கடுப்பான கமிஷனர், 'சிகிச்சையில் இருந்தவரை நான் போய் அழைத்து வந்து பாடம் நடத்த சொல்ல முடியுமா? ஆசிரியர் இல்லை என்று என்னிடம் கேட்டிருந்தால் மாற்று ஆசிரியர் ஏற்பாடு செய்திருப்பேன். தற்போது பாதிக்கப்பட்டது மாணவர்கள் தானே' என, 'டோஸ்' விட்டார்.மற்றொரு தலைமை ஆசிரியர், 'இந்த ஆட்சியில் கேட்டதெல்லாம் கிடைக்குதா என்ன...? அதனால, அந்த தலைமை ஆசிரியர் சும்மா இருந்திருப்பார்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 04, 2024 06:09

மாற்று ஆசிரியர்கள் இருக்கட்டும், இருப்பவர்களை போதிப்பதைத்தவிர மற்ற வேலைகளுக்கு அனுப்புவதால் வகுப்பு பாதிக்கப்படாதா? அதை யார் சொல்வது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை