உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவங்களுக்கும் பொருந்துமா?

இவங்களுக்கும் பொருந்துமா?

துாத்துக்குடியில் நடந்த வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் அமைச்சரும், மாவட்ட செயலருமான கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல், கருணாநிதி பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், 'விரைவில், ஊரக உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெறும். அதேபோல, மற்ற தேர்தல்களிலும் வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும். தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. புதிதாக கட்சியில் இணைந்தவர்களை அனைவரும் அரவணைத்து செல்ல வேண்டும்' என்றார்.இதைக் கேட்ட நிர்வாகி ஒருவர், 'தொடர்ந்து பதவியில் இருக்கணும்னு நினைக்கக் கூடாதா... அது இவங்களுக்கும் பொருந்துமா...?' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 26, 2024 06:08

தொடர்ந்து பதவியில் இருக்கக்கூடாது என்றால் முதல்வர் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டுமே அதற்குத் துணிவு உண்டா ?


சமீபத்திய செய்தி