உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / போராட அவசியமே இருக்காதே!

போராட அவசியமே இருக்காதே!

திருப்பூரில், அடமான தொகையை திரும்ப செலுத்தியபின்பும், அசல் ஆவணத்தை திருப்பி தராத வங்கியை முற்றுகையிட போவதாக, தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.இதன்படி, போராட்டம் நடத்த கலெக்டர் அலுவலகநுழைவு வாயிலுக்கு நிர்வாகிகள் வர, ஏற்கனவே எதிர்பார்த்து காத்திருந்த போலீசார், என்னவென விசாரித்தனர். விவசாய சங்க நிர்வாகிகள், போலீஸ் இடையே நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்பின், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் வங்கிக்கு விவசாயிகளை போலீசார் அழைத்து சென்றனர். அசல் ஆவணத்தை திரும்ப தருவதாக, வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போலீசாரும் நிம்மதி அடைந்தனர்.விவசாயி ஒருவர், 'இப்படி எல்லா விஷயத்தையும் அதிகாரிகள் அணுகினால், விவசாயிகள் போராட வேண்டிய அவசியமே இருக்காதே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !