உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவங்க கட்சி தானா வளரும்!

இவங்க கட்சி தானா வளரும்!

ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'இந்திய ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை லோக்சபா தேர்தல் நிரூபித்துள்ளது. வெற்றி பெற்றவர்கள் கொண்டாட தான் செய்வர். அதனால், தமிழகத்திற்கு நன்மையா, தீமையா என்பதை மக்கள் அடுத்து வரும் தேர்தல்களில் நிரூபிப்பர் என நம்புகிறேன்.'ஒரே ஒரு வருத்தம் இருக்கிறது. இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், கோவை போன்ற ஒரு மாநகரம், பிற நகரங்களுடன் போட்டி போடும் நிலையில் இல்லை. இந்திய வளர்ச்சிக்கு ஏற்ப, சேர்ந்து முன்னேறுவதற்கு பதிலாக, ஒவ்வொரு முறையும் கோவை மக்கள் வேறு விதமாக முடிவெடுக்கின்றனர். அந்த வளர்ச்சிக்கு ஏற்ப பயணத்தை தொடர வகை இல்லாமல் செய்து விடுகின்றனர்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'இவங்க கட்சி ஜெயிச்சா தான் கோவை வளரணும்னு இல்லையே... மத்திய ஆட்சியை பயன்படுத்தி கோவையை வளர்த்தால், இங்க இவங்க கட்சியும் தானா வளரும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ