உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மாற்றம் கொண்டு வருவாரா?

மாற்றம் கொண்டு வருவாரா?

சென்னை, அம்பத்துார், காமராஜர் அரசு பெண்கள்மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி துறைக்கு தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளி என்றால் அவமான சின்னமாக இருந்த காலத்தை மாற்றி, பெருமைப்படும் காலமாக மாற்றி உள்ளார் நம் முதல்வர். கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதும், மூன்று ஆண்டுகளில் சைக்கிள் வழங்குவதற்கு மட்டும், 825 கோடி ரூபாய் ஒதுக்கிய பெருமை நம் முதல்வரையே சாரும்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'அதெல்லாம் சரி... ஆளுங்கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ., அமைச்சர் வீட்டுப் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கின்றனரா... இதில் முதல்வர் ஏதாவது மாற்றம் கொண்டு வருவாரா...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arul Narayanan
ஆக 13, 2024 14:25

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மது குடிப்பது அவமானம் இல்லையா?


sankaranarayanan
ஆக 13, 2024 06:34

உங்களுக்கு வேண்டியது சைக்கிளா அல்லது ஆளும் கட்சி வேட்பாளர்களின் வாரிசா எது முக்கியம் என்று யோசித்து பார்க்கவும்


சமீபத்திய செய்தி