உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அ.தி.மு.க.,வுக்கு போயிடலாமா?

அ.தி.மு.க.,வுக்கு போயிடலாமா?

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி தலைமையில், சென்னையில் நடந்த கரூர் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அந்த தொகுதிக்கு உட்பட்ட திருச்சி, மணப்பாறை சட்டசபை தொகுதி நிர்வாகிகள், அமைச்சர் நேரு பற்றிய புகார் மனுவை உதயநிதியிடம் அளித்தனர்.அந்த மனு தன் மீதான புகார் கடிதம் என்பதை அறியாமல், முதன்மை செயலர் என்ற முறையில் அமைச்சர் நேருவே கடிதத்தை படித்தார்...அதில், 'அமைச்சர் நேருவின் உறவினரான அ.தி.மு.க.,வை சேர்ந்த வெங்கடாசலம், பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்பணி செய்கிறார். தி.மு.க.,வினருக்கு வேலை தர மறுக்கின்றனர்' என, கூறப்பட்டிருந்தது.இதை படித்த நேரு கோபத்தை வெளிக்காட்டாமல், அருகில் இருந்த அமைச்சர் மகேஷிடம், 'வெங்கடாசலத்தை தி.மு.க.,வில் சேர்த்து விடலாமா...' என கேட்க, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.புகார் அளித்த நிர்வாகிகள், 'அப்ப நாம எல்லாரும் அ.தி.மு.க.,வுக்கு போயிடலாமா...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ