உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / டபுள் இன்கம் திட்டம்!

டபுள் இன்கம் திட்டம்!

சென்னை, பெருங்குடி குப்பை கிடங்கில், 'பல்லுயிர் பெருக்க சுற்றுச்சூழல் பூங்கா' அமைக்க, மாநகராட்சி சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.இதில் பங்கேற்ற ஒருவர், 'சோழிங்கநல்லுார் தொகுதியில், அழிவின் விளிம்பில் 60க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.'குப்பைக் கிடங்கில் பூங்கா அமைப்பதற்கு பதிலாக, 60 ஏரிகளில் சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தால், ஏரிகளும் பாதுகாக்கப்படும்.'இதனால் அப்பகுதி மக்களுக்கும் பொழுது போக்க இடம் கிடைக்கும். இது ஏன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தோன்றவில்லை?' என்று அப்பாவியாக கேட்டார்.அதற்கு சமூக ஆர்வலர் ஒருவர், 'ஏரிகளை ஆக்கிரமித்து, பட்டா போட்டால், பல 100 கோடியும், குப்பை மேட்டில் பூங்கா திட்டம் வாயிலாக சில கோடியும் பங்கு போடலாம். எனவே, 'டபுள் இன்கம்' எனும் திட்டப்படி, இவர்கள் குப்பைக் கிடங்கில் தான் பூங்கா அமைக்க திட்டமிடுவர்' என, முணுமுணுத்தார்.இதைக் கேட்டு, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
பிப் 16, 2024 22:24

மகளிர் உதவித்தொகை கொடுத்து டாஸ்மார்க் வாயிலாக வசூலிப்பது. மகளிருக்கு Free bus கொடுத்து ஓட்டை Cover பண்ணுவதென திராவிட மாடலில் எல்லாமே டபுள் play திட்டம் தான்.


புதிய வீடியோ