உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நீலகிரியை தக்கவச்சா போதும்!

நீலகிரியை தக்கவச்சா போதும்!

கோவையில், பில்லுார் - 3 குடிநீர் திட்ட துவக்க விழாவில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ராஜா பேசுகையில், 'தண்ணீர் இல்லாத ஊருக்கு பெண் கொடுக்க மாட்டார்கள் என்று நேரு பேசினார். நேருவின் முரட்டு மீசையை பார்த்து பெண் கொடுக்க எல்லாரும் பயந்த போது, எங்கள் ஊரில் இருந்து தான் பெண் கொடுத்தோம்.'நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையத்துக்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். பெரம்பலுார் குடிநீர் திட்டத்துக்கு, 300 கோடி ரூபாய் கொடுப்பதாக சொல்லி இருந்தீர்கள். அதையும் ஒதுக்க வேண்டும்' என்றார்.இதைக் கேட்ட கட்சி நிர்வாகி ஒருவர், 'பெரம்பலுார், திருச்சியை நேரு பார்த்துக்குவார்... நீலகிரியை இவர் தக்க வச்சா போதும்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை