உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / எம்.பி., பதவி தருவாங்களா?

எம்.பி., பதவி தருவாங்களா?

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மதுரையில் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசுகையில், '30 ஆண்டுகளுக்கு முன்பு, என் மீது பொய் வழக்கு போடப்பட்டு சி.பி.ஐ., விசாரித்தது. 'இதுதொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற்றேன். உங்கள் மீது குற்றமில்லை. அதனால் நீங்கள் முன்ஜாமின் எடுக்க வேண்டாம்' என்றனர்.நானும் எடுக்கவில்லை. விசாரணையில், என் மீது குற்றம் இல்லை என உறுதியானது. ஆகவே, வழக்கறிஞர்கள் இதுபோன்று பிரச்னைகளை முன்கூட்டியே கணிக்க வேண்டும்' என்றார்.கூட்டத்தில் பங்கேற்ற வக்கீல் ஒருவர், 'தி.மு.க., வில் வழக்கறிஞர்கள் முக்கிய வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்று தந்தால், அவங்களுக்கு எம்.பி., பதவி தர்றாங்க... நம்ம கட்சியிலயும் எம்.பி., தந்தா நல்லாயிருக்குமே' என முணுமுணுக்க, சக வக்கீல்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை