உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / வாக்காளர்கள் நம்பணுமே!

வாக்காளர்கள் நம்பணுமே!

சென்னை, மாதவரத்தில் நடந்த தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் வந்துள்ளன. அதற்காக, நாம் அலட்சியமாக இருந்து விடாமல், கடுமையாக உழைக்க வேண்டும். அதே நேரம், மத்தியில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பும் கிடைத்துள்ளது. அதையும் நாம் நம்பி விடக்கூடாது' என்றார்.மூத்த நிர்வாகி ஒருவர், 'எதையும் நம்ப வேணாம்னு சொல்றாரு... அதெல்லாம் சரி... இப்படி ஒரு மன குழப்பத்துல நாம போய் ஓட்டு கேட்டா, வாக்காளர்கள் நம்மை நம்பணுமே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்த நிர்வாகிகள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை