உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ரூ.30,000 முதலீட்டில் சேலை பாலிஷ் தொழில் துவங்கலாம்!

ரூ.30,000 முதலீட்டில் சேலை பாலிஷ் தொழில் துவங்கலாம்!

புடவைகளில் உள்ள கறைகளை நீக்கி, அவற்றுக்கு பாலிஷ் போட்டு புத்தம் புதிது போல மாற்றித் தரும், சென்னை, தி.நகரை சேர்ந்த கனகவல்லி:திருமணமான புதிதில், ஒரு போட்டோ ஸ்டூடியோவில் பிரின்டிங் செக் ஷனில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். அங்கு காலை 9:00 முதல் இரவு, 9:00 வரை வேலை இருக்கும். இரண்டு பசங்களை பார்த்துகிட்டு வேலைக்குப் போறது கஷ்டமாக இருந்தது. அப்போது என் அண்ணன், புடவைக்கு பாலிஷ் போடும் வேலையை பற்றி எடுத்துச் சொல்லி, அதை சொல்லிக் கொடுத்தாரு.நான் முழுசாக வேலை கத்துகிட்டதும், அவரே புடவை பாலிஷ் போடுவதற்கான செட்டப்பையும் தயார் செய்து கொடுத்தாரு... அப்படி துவங்கிய என் பயணம், இப்போது வரை தொடர்ந்தபடியே உள்ளது. துவக்கத்தில் யாருமே என்னை நம்பலை; 'காஸ்ட்லி' புடவைகளை தர பயந்தனர்.ஆனால், ஒவ்வொருவரிடமும் பக்குவமாக பேசி புரியவைக்கப் போராடினேன். 'உங்களுக்கு திருப்தியில்லை எனில், பணம் தர வேண்டாம்' என்று சொல்லித் தான், 'ஆர்டர்' பிடிச்சேன். இதுவரை 5,000 பட்டுப் புடவைகளுக்கு மேல் பாலிஷ் போட்டுள்ளேன். என்னிடம் பாலிஷ் போட வரும் ஒவ்வொரு புடவையையும் என் சொந்த புடவையை போலத் தான் பார்த்துக் கொள்வேன். புடவையில் இருக்கும் அழுக்கை நீக்குவது முதல், பாலிஷ் போட்டு பக்காவாக, 'பேக்' செய்யும் வரை பார்த்து பார்த்து செய்வேன். இது, எல்லாவற்றுக்குமே கணவர் தான் பக்கபலமாக உள்ளார்.பாலிஷ் போடும் இந்த செட்டப்பை அன்று, 10,000 ரூபாய் முதலீட்டில் கடன் வாங்கி தான் துவங்கினேன்.இப்போது, இந்த பிஸ்னஸ் வாயிலாக மாதத்திற்கு, குறைந்தபட்சம், 25,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும் தான் வேலை செய்கிறேன்.குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, ஏதாவது பிசினஸ் செய்ய நினைக்கும் பெண்கள், இந்த தொழிலை தாராளமாக எடுத்து செய்யலாம். இதற்கு, 10க்கு 10 இடம் இருந்தால் போதும். இன்றைய சூழலில், இந்த செட்டப் வைக்க, 30,000 ரூபாய் முதலீடு தேவை. ஆனால், வாடிக்கையாளரை திருப்திபடுத்துகிற மாதிரி வேலை செய்தால், போட்ட ரூபாயை விரைவிலேயே எடுத்து விடலாம்.என்னிடம் பலர் இந்த டெக்னிக்கை கற்று, சொந்தமாக பிஸ்னஸ் செய்து வருகின்றனர். ஆர்வம் உள்ளோருக்கு கற்று கொடுக்கவும், பிஸ்னஸ் துவங்க வழிகாட்டவும் நான் தயார்!தொடர்புக்கு: 94452 83994


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை