உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / உ.பி. போலீஸ் எழுத்து தேர்வு அனுமதி சீட்டில் சன்னி லியோன் படம்

உ.பி. போலீஸ் எழுத்து தேர்வு அனுமதி சீட்டில் சன்னி லியோன் படம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேச மாநில காவலர் எழுத்து தேர்வுக்கான அனுமதி சீட்டில் பாலிவுட் நடிகை சன்னிலியோன் புகைப்படத்துடன் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. உ.பி., மாநிலத்தில் காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய எழுத்து தேர்வுக்காக மாநிலம் முழுதும் 75 மாவட்டங்களில் 2ஆயிரத்து 385 தேர்வு மையங்களில் இன்று நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இதில் உரிய அனுமதி சீட்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அவ்வாறு வழங்கப்பட்ட ஒரு அனுமதி சீட்டில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. இந்த அனுமதி சீட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

B MAADHAVAN
பிப் 18, 2024 15:26

வேண்டுமென்றே எதிர்க் கட்சியினர் செய்த வேலையாகக் கூட இருக்கலாம். யார் வேலைக்கு முறையாக பணம் கட்டி விண்ணப்பித்திருந்தாலும், தற்கால கம்ப்யூட்டர் முறையில், அதுவே எல்லா விவரங்களையும் சரிபார்த்து, சரியாக இருந்தால், admission card தயார் செய்து விண்ணப்பித்திருந்த விலாசத்திற்கு எல்லாவற்றையும் தயார் செய்து விடும். புகைப்படத்தை எல்லாம் பார்த்து முறையாக ஆணா எல்லா விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து தயார் செய்யும் நிலையில் artiricial intelligence முறை எல்லாம் இன்னும் புகுத்தப்படவில்லை என்பது தான் உண்மை. யாரோ வேண்டுமென்றே விளையாட்டுக்காக அல்லது கெட்டப் பெயர் ஏற்படுத்தப் பட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் செய்த வேலையாகத் தான் இருக்க வேண்டும். தவறு செய்தவர் நிச்சயம் தண்டிக்கப் பட வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 18, 2024 08:26

சன்னி லியோனும் வந்து தேர்வு எழுதினா கூட அமர்ந்து எழுதுறவங்களுக்கு நெஞ்சு துடிக்கும் .......


அப்புசாமி
பிப் 18, 2024 07:55

கோடி கோடியா ஜி.எஸ்.டி நிதியை ஒதுக்கி உ.பி ஐ முன்னேத்துறோம். 2047 வரை டைம்.இருக்கு ஹைன்.


Priyan Vadanad
பிப் 18, 2024 01:24

உத்தரப்பிரதேஷில் பெண்களுக்கு ரொம்பவும் மரியாதை, முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதுக்கு இது ஒரு நல்ல ஆதாரம்.


Priyan Vadanad
பிப் 18, 2024 01:23

சன்னி லியோனுக்கு தீட்சை கொடுத்து நாளாகிவிட்டது. கேரளாவில் ஒரு பக்தர் கூட்டமே இருந்ததாக ஒரு செய்தி. யுத்தர்பிரதேஷுக்கு எதற்காக வந்தார்???? காவலர் தேர்வாளரில் இவரும் ஒருவரா?