துல்லியம்!
நாகர்கோவில், வடசேரி, அரசு நடுநிலைப் பள்ளியில், 1977ல், 5ம் வகுப்பு படித்தாள் என் மகள். அப்போது, திருச்சி லால்குடியில் பணிபுரிந்தேன்; விடுப்பில் வீட்டிற்கு வந்தபோது, ஆசிரியை அடித்து விட்டதாக கூறி அழுதாள்; சமாதானம் செய்தேன். விசாரிப்பதற்காக மறுநாள் பள்ளிக்கு சென்றேன். வகுப்பு ஆசிரியையை கண்டதும் வியப்படைந்தேன். எனக்கு, 8ம் வகுப்பில் கற்பித்த ஆசிரியை லட்சுமி. இருப்பினும், அடையாளம் தெரியாத மாதிரி, 'என் மகளை ஏன் அடிச்சீங்க...' என கேட்டேன். சிரித்தபடி, 'படிக்காமல், விளையாடியதால் அடித்தேன்...' என்றவர், 'சரி நாராயணா... நீ எப்படி இருக்கிறாய்... என்ன வேலை செய்கிறாய்; உன் மூத்த மகளா இவள்...' என கேள்விகளை அடுக்கினார். பல ஆண்டுகளுக்குப் பின்னரும், என்னை துல்லியமாக நினைவில் வைத்திருந்தது, மிகவும் மகிழ்ச்சி தந்தது. நலம் விசாரித்து விடைபெற்றேன். இப்போது என் வயது, 78; அந்த நிகழ்வை நினைத்தவுடன் பூரிப்படைகிறேன்!- டி.வி.எ.நாராயணன், சென்னை.தொடர்புக்கு: 92832 10038