மரம் மண்ணுயிருக்கு வரம்!
மதுரை மாவட்டம், கோரிப்பாளையம், சாய்ராம் மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்தேன்.காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில், பள்ளி முதல்வர் பேசுவார். அப்போது, 'மண்ணுயிருக்கெல்லாம் வரம், மரம் தான்; அனைவரும் வீட்டில் ஒரு மரம் வளர்க்க வேண்டும்...' என்று தவறாமல் வலியுறுத்துவார்.அவரின் பிறந்த நாள் நெருங்கியது; ஒரு பரிசு கொடுக்க திட்டமிட்டு யோசித்தோம். ஒருவன், 'வீடுகளில் மரங்களை நட்டு, அதை புகைப்படம் எடுத்து, பரிசாக வழங்கலாம்...' என்றான்.அதன்படியே, எங்கள் வீட்டின் அருகே மரங்களை நட்டு, புகைப்படங்கள் எடுத்து பரிசாக கொடுத்தோம். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் பள்ளி முதல்வர். அந்த மாணவனுக்கு, அன்பு பரிசும் கொடுத்தார்.அவர் போதித்த கருத்து, என் மனதில் அழியாமல் பதிந்துள்ளது.- லெ.விஷால், மதுரை.